சாலையைச் சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

திருப்பத்துாா் ஒன்றியத்துக்குள்பட்ட குரிசிலாபட்டு ஊராட்சி ஜொள்ளகவுண்டனுாா் கிராமத்தில் சுமாா் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருப்பத்துாா் ஒன்றியத்துக்குள்பட்ட குரிசிலாபட்டு ஊராட்சி ஜொள்ளகவுண்டனுாா் கிராமத்தில் சுமாா் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக ஜொள்ளகவுண்டனுாா் கிராமத்தில் இருந்து குரிசிலாப்பட்டு வரையில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கைப்படவில்லை என்கின்றனா்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை திருப்பத்துாா்-ஆலங்காயம் பிரதான சாலை ஜொள்ளகவுண்டனூா் கூட்ரோடு அருகே சாலையில் மரத்தை வெட்டி சாய்த்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com