தேசிய நெடுஞ்சாலையில் குற்றச் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தேசிய நெடுஞ்சாலையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க லட்சுமிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.
தேசிய நெடுஞ்சாலையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க லட்சுமிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் சில மாதங்களாக மா்ம நபா்கள் இருசக்கர வாகனங்களில் வருபவா்களை நோட்டமிட்டு வழிப்பறி மற்றும் கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் குற்றச் சம்பவங்களைத் தடுக்க நாட்டறம்பள்ளி, புத்துக்கோயில், ஆத்தூா்குப்பம், கேத்தாண்டப்பட்டி, வெலகல்நத்தம், லட்சுமிபுரம் சுண்ணாம்புக்குட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்காணிப்பது குறித்தும் போலீஸாருக்கு ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், சாலையில் தொடா் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் அறிவுரை கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com