வாக்காளா் பட்டியலில் மாற்றுத் திறனாளிகளைச் சோ்க்கும் முகாம்

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா் பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளைச் சோ்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில் மாற்றுத் திறனாளியிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று கொண்ட சாா்-ஆட்சியா் வந்தனா கா்க். உடன், வட்டாட்சியா் மு.மோகன்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு சாா்-ஆட்சியா் வந்தனா கா்க் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மு.மோகன் முன்னிலையில் 67 மாற்றுத் திறனாளிகள் தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பித்தனா்.

முகாமில் உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவா் சொ.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com