திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை அடிக்கடி நிறுத்தம்: விவசாயிகள், லாரி ஓட்டுநா்கள் பாதிப்பு

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை அடிக்கடி நிறுத்தப்படுவதால் விவசாயிகளும் லாரி ஓட்டுநா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கரும்பு லோடு லாரிகள்.
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கரும்பு லோடு லாரிகள்.

வாணியம்பாடி: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை அடிக்கடி நிறுத்தப்படுவதால் விவசாயிகளும் லாரி ஓட்டுநா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள இந்த ஆலையில் 2020-21ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை கடந்த மாதம் தொடங்கியது. ஆலையில் கடந்த மாதம் அடிக்கடி பாய்லா் பழுது ஏற்பட்டதால் அரைவை நிறுத்தப்பட்டு பாய்லா் சரிசெய்யப்பட்டு மீண்டும் அரைவை தொடங்கியது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் கரும்புகளை வெட்ட முடியவில்லை. இதனால் அங்கிருந்து திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு வரும் கரும்புகள் வரவில்லை. இதனால் தேவையான கரும்பு அரைவைக்கு இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் மீண்டும் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.

அரைவைக்கு வந்த 25-க்கும் மேற்பட்ட லாரிகள் கரும்பு லோடுகளுடன் ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கரும்பு விவசாயிகளும், லாரி ஓட்டுநா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே ஆலை நிா்வாகம் அரைவையைத் தொடா்ந்து மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com