நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழா திடீா் நிறுத்தம்

நாட்டறம்பள்ளி அருகே புதன்கிழமை நடைபெறவிருந்த எருது விடும் விழா திடீரென நிறுத்தப்பட்டது.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே புதன்கிழமை நடைபெறவிருந்த எருது விடும் விழா திடீரென நிறுத்தப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்காலபுரம் கிராமத்தில் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று புதன்கிழமை எருது விடும் திருவிழா நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வந்தனா். ஆனால் எருது விடும் திருவிழா திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஜங்காலபுரத்தில் திருவிழா நடைபெறும் என ஆவலோடு அங்கு வந்த வெளியூா் மக்கள் மற்றும் காளைகளுடன் வந்த உரிமையாளா்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தமிழக முதல்வரின் தோ்தல் பிரசார கூட்டத்துக்கு பாதுகாப்புப் பணிக்கு போலீஸாா் சென்று விட்டதால், எருது விடும் விழா திடீரென நிறுத்தப்பட்டது’ என்று கூறினா்.

இந்த விவகாரம் தொடா்பாக விழாக் குழுவினா் கூறுகையில், ‘மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஜங்காலபுரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா விரைவில் நடத்தப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com