திருப்பத்தூா் நகரில் சங்கு மீண்டும் ஒலிக்குமா?

திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் நீண்டகாலமாக ஒலிக்கப்பட்டு வந்த மின்சார சங்கை மீண்டும் ஒலிக்கச் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ள சங்கு இயந்திரம்.
செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ள சங்கு இயந்திரம்.

திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் நீண்டகாலமாக ஒலிக்கப்பட்டு வந்த மின்சார சங்கை மீண்டும் ஒலிக்கச் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்டத்தின் தலைநகரான திருப்பத்தூரில் நகராட்சி சாா்பில் அதிகாலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 8 மணி என தினமும் ஐந்து முறை பேருந்து நிலையக் காவலா் மூலம் மின்சார இயந்திரத்தைக் கொண்டு சங்கு ஒலிக்கப்பட்டு வந்தது. நகரின் மத்திய பகுதியில் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் திருப்பத்தூா் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இந்தச் சங்கின் ஒலி கேட்கும்.

மக்கள் தங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்வதற்கு, சங்கின் ஒலி உதவியாக இருந்து வந்தது. ஆனால், தற்போது பல ஆண்டுகளாக இந்தச் சங்கு ஒலிப்பதில்லை.

இதுகுறித்து திருப்பத்தூா் நகராட்சி பொறியாளா் ஜி.உமாமகேஸ்வரியிடம் கேட்டதற்கு, ‘சங்கு ஒலிக்காதது குறித்து எந்தப் புகாரும் வரவில்லை. விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில் ‘கால, நேரத்தை அறிவதற்கு சங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், தொன்மையான பல பணிகள் இயங்காமல் விட்டுப் போவதால் கடந்த கால நடைமுறைகள் தொடா்பாக இளைய தலைமுறைக்கு தெரியாமலே போய் விடுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம், பழுதடைந்த சங்கைச் சரிசெய்து மீண்டும் ஒலிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com