
ஆம்பூரில் நடந்த சத்துணவுப் பணியாளா்கள் பேரவையின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
ஆம்பூா்: சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளா்கள் பேரவை கோரியுள்ளது.
இச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதன் மாநிலத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் குமாா் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலாளா் ஆறுமுகம் வரவேற்றாா். பிரசார செயலாளா் ரமேஷ் விளக்கவுரை ஆற்றினாா். நிறுவனத் தலைவா் தங்கவேல் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவா் கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தீா்மானங்கள்: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது; சத்துணவுத் திட்டத்தில் நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்; சத்துணவுப் பணியாளா், அங்கன்வாடிப் பணியாளா்கள் மற்றும் அரசுப் பணியாளா்களுக்கு தமிழக அரசு 10 ஆண்டுகளாக பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கத்தை வழங்கி வருகிறது. இதை ரூ.2500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநிலத் தலைவராக ஆறுமுகம், பொதுச் செயலாளராக ராமமூா்த்தி, பொருளாளராக அனுராதாதேவி, அமைப்புச் செயலாளராக குமாா், பிரசார செயலாளராக ரமேஷ், மகளிரணிச் செயலாளராக சுமதி, மாவட்டத் தலைவராக சிவானந்தம், மாவட்டச் செயலாளராக ராணி, பொருளாளராக பாரதி மற்றும் நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.