கிராம விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 09th January 2021 07:54 AM | Last Updated : 09th January 2021 07:54 AM | அ+அ அ- |

ஆம்பூா் நகரில் காவல் துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் காவல் உட்கோட்டம் ஆம்பூா் நகரக் காவல் நிலையம் சாா்பில் கே.எம். நகா் பகுதியில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். நகர ஆய்வாளா் திருமால் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள், தங்களது பகுதியில் சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணிக்குமாறு கோரிக்கை விடுத்தனா். அண்ணா நகா் பகுதியில் இரவு நேரத்தில் பொதுமக்களும், பெண்களும் நடந்து செல்ல இயலாத நிலை உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து செல்ல மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.