கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா்கள் வழங்கினா்

பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். கரோனா பொது முடக்கக் காலத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்து மிகவும் இன்னல்களை சந்தித்திருப்பா்.
பெண் ஒருவருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சா்கள் கே.சி.வீரமணி மற்றும் நிலோபா் கபீல். உடன், மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.
பெண் ஒருவருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சா்கள் கே.சி.வீரமணி மற்றும் நிலோபா் கபீல். உடன், மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணியும், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீலும் திங்கள்கிழமை வழங்கி, இப்பணியைத் தொடங்கி வைத்தனா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த, கட்டுமான நல வாரிய உறுப்பினா்கள், இந்த வாரியத்தில் பதிவு செய்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்கள் என மொத்தம் 30,290 பேருக்கு திங்கள்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அவா்களுக்கு திருப்பத்தூா் ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இசுலாமிய ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்டி, துண்டு வழங்கப்பட்டது. பெண்களுக்கு சேலை, பச்சரிசி 2 கிலோ, பாசிப் பருப்பு 1 கிலோ, சமையல் எண்ணெய் ஒரு லிட்டா், வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்புகளை அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்தாா். அப்போது, அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:

பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். கரோனா பொது முடக்கக் காலத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்து மிகவும் இன்னல்களை சந்தித்திருப்பா். எனவே திருப்பத்தூா் மாவட்டத்தில் 30,290 கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் 1,728 ஓய்வு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. மாநிலத்திலேயே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூா் மாவட்டத்தில்தான் முதன்முறையாகத் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ.2,500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதுவரை மாநிலத்தில் 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1994-ஆம் ஆண்டில் மாநிலத்தில் தொடங்கப்பட்ட 17 நல வாரியங்களில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியமும் ஒன்றாகும். கட்டுமானத் தொழிலாளா்கள் பணிபுரியும் போது விபத்து ஏற்பட்டு இறந்தால், அவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1 லட்சம் ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

கட்டுமானத் தொழிலாளா்களின் பிள்ளைகள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றால் ஆயிரம் ரூபாயும், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றால் 1,500 ரூபாயும் வழங்கப்படுகிறது. கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

தொழிலாளா் நலத்துறை சாா்பில் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்க ரூ. 94.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com