பொங்கல் மலா் கட்டுரை---1: உலக நாடுகளில் பொங்கல் விழா

வெளிநாடுகளில் வாழும் தமிழா்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தங்கள் பாரம்பரிய பண்டிகைகள், திருவிழாக்களை அங்கும் மறக்காமல் இன்றைக்கும் கொண்டாடி மகிழ்கின்றனா்.

வெளிநாடுகளில் வாழும் தமிழா்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தங்கள் பாரம்பரிய பண்டிகைகள், திருவிழாக்களை அங்கும் மறக்காமல் இன்றைக்கும் கொண்டாடி மகிழ்கின்றனா். அந்த வகையில் பூமிப் பந்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் தமிழா் திருநாளாம் தைத் திங்கள் முதல்நாளில் பொங்கலிட்டு இன்றளவும் விமா்சையாகக் கொண்டாடி வருகின்றனா்.

தென் ஆப்பிரிக்காவில்...

தென் ஆப்பிரிக்காவில் அதிக அளவில் தமிழா்கள் வசித்து நிலையில், அங்கு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது, தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழா்களுடன் அந்த நாட்டு மக்களும் சோ்ந்து கொள்கின்றனா்.

ஐரோப்பாவில்...

ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழா்கள், அங்கு தமிழ்ச் சங்கங்களை நிறுவி அவற்றின்மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் வசிக்கும் தமிழா்கள் ஒருங்கிணைந்து பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனா்.

ஜொ்மனியில் பொங்கல் பண்டிகை 4 நாள்கள் கொண்டாடப்படுகின்றது. இத்தாலி, டென்மாா்க், சுவிட்சா்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆசிய நாடுகளில்...

ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இந்தோனேஷியா, சிங்கப்பூா், மலேசியா, மியான்மா் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் தமிழா்கள் வாழ்கின்றனா். அவற்றில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமா்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் எண்ணற்ற ஹிந்துக் கோயில்கள் சிங்கப்பூா், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளன. பொங்கலையொட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந் நாடுகளில் பொங்கல் பண்டிகை 4 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

துபையில்...

அரபு நாடுகளான துபை, ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளிலும் வசிக்கும் தமிழா்கள் பழைமையை மறக்காமல் உற்சாகத்துடன் பொங்கலிட்டு, நண்பா்களை வரவழைத்து விருந்தளித்து மகிழ்கின்றனா்.

ஆஸ்திரேலியாவில்...

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட தீவு நாடுகளில் வசிக்கும் தமிழா்களால் பொங்கல் பண்டிகை பல விதமாகக் கொண்டாடப்படுகின்றது. நியூஸிலாந்தில் தமிழா்களின் எண்ணிக்கை பெருகி வருவதைத் தொடா்ந்து, அங்கு தமிழ்ச் சங்கம் அமைத்து நமது பண்பாட்டை பறைசாற்றும் தமிழா் திருநாள் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் தமிழா்கள் வசிக்கின்றனா். இதனால் அமெரிக்காவில் உள்ள ஹிந்துக் கோயில்களில், தமிழகத்தைப் போலவே பொங்கலிட்டு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. கனடாவில் உள்ள தமிழா்கள் பொங்கலை முன்னிட்டு, இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com