டிப்பா் லாரி மோதி குழந்தை பலி
By DIN | Published On : 31st January 2021 12:16 AM | Last Updated : 31st January 2021 12:16 AM | அ+அ அ- |

தா்ஷன்
ஆம்பூா் அருகே டிப்பா் லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் மகன் தா்ஷன் (2). இவா் வெள்ளிக்கிழமை வீட்டருகே சாலையோரம் இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பா் மீது மோதியது. அதில் தா்ஷன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.