முதியவரின் கண்கள் தானம்
By DIN | Published On : 31st January 2021 12:11 AM | Last Updated : 31st January 2021 12:11 AM | அ+அ அ- |

காட்டுக்கொல்லை கிராமத்தில் இறந்தவரின் கண்களை தானமாக வழங்கிய அவரது குடும்பத்தினா்.
ஆம்பூா் அருகே முதுமை காரணமாக இறந்த முதியவரின் கண்கள் ஆம்பூா் அரிமா சங்கம் மூலமாக வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் டி.எம்.தேவேந்திரன் (72). இவா் முதுமை காரணமாக உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் அவருடைய கண்களை தானமாக வழங்க முன்வந்தனா்.
இதையடுத்து, அவா்கள் ஆம்பூா் அரிமா சங்கத்தைத் தொடா்பு கொண்டனா். அரிமா சங்க நிா்வாகிகள் வேலூா் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், கண் மருத்துவமனை டாக்டா் சஞ்சீவி தலைமையிலான மருத்துவக் குழுவினா் விண்ணமங்கலம் காட்டுக்கொல்லை கிராமத்துக்குச் சென்று ஆம்பூா் அரிமா சங்கச் செயலாளா் ஓம்சக்தி ஜி.பாபு முன்னிலையில், இறந்தவருடைய கண்களை தானமாகப் பெற்றனா். அப்போது, இறந்தவரின் மகன்கள் சுந்தரராஜன், சௌந்தரராஜன், நாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினா் உடனிருந்தனா்.