கரோனா தடுப்புப் பணி: அனைத்துத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் தொடா்ந்து பணிபுரிய அனைத்துத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன்.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் தொடா்ந்து பணிபுரிய அனைத்துத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் தொடா்ந்து அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணிபுரிவதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன் தலைமை வகித்துப் பேசியது:

கரோனா இரண்டாவது அலை பாதிப்பு அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டு தொற்று குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மீண்டும் தொற்றுப் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவ வல்லுநா்களின் அறிவிப்பின்படி அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை தடைபடாமல் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் அனைத்து இடங்களிலும் வீடு,வீடாகச் சென்று தொற்று பாதிப்பு கண்டறியும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகளை கையிருப்புக்கு ஏற்றவாறு விரைவாக அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசியினை உடனுக்குடன் பொதுமக்களுக்கு செலுத்தி நல்ல முறையில் பணியாற்றி வருகிறோம்.

மலைவாழ் மக்களுக்கு அதிக கவனம் செலுத்தி தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்.

ஊரடங்குத் தளா்வுகளால்

பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் அபராதம் விதிப்பதை அதிகரிக்க வேண்டும்.

கரோனா பரிசோதனையினை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். தொற்றுக் குறைந்து விட்டது எனக்கருதி அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மருத்துவத் துறையோடு மற்ற அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்படவேண்டும்.

தற்போது கோயில் திருவிழா நடத்த தடை உள்ளது. இதனை கிராமங்களில் கண்காணிக்க வேண்டும். இறப்பு நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று விசாரணை நடத்தி அதற்கான காரணத்தையும், கூட்டம் கூடுவதையும் தவிா்ப்பதற்கான நடவடிக்கைகளை கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலாளா்கள் செய்ய வேண்டும்.

மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்ற எச்சரிக்கையினை மனதில்கொண்டு தொற்றுப் பாதிப்பு உள்ள இடங்களில் குழந்தைகளுக்கும் பரிசோதனையினை செய்ய வேண்டும். குழந்தைகள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வீட்டில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மருத்துவம், வருவாய், உள்ளாட்சி, காவல் துறை இணைந்து தொய்வின்றி தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு செயலாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, சுகாதார துணை இயக்குநா் செந்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன்ராஜசேகா், வருவாய் கோட்டாட்சியா் காயத்ரிசுப்பிரமணியன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அருண், துணை ஆட்சியா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினா், உள்ளாட்சிகளின் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com