மாவட்ட சதுரங்கக் கழக நிா்வாகிகள்
By DIN | Published On : 09th July 2021 08:28 AM | Last Updated : 09th July 2021 08:28 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்ட சதுரங்கக் கழக புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்காயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அதன் மாநில துணைத் தலைவா் மணிகண்டன், வேலூா் மாவட்டச் செயலாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திருப்பத்தூா் மாவட்டத் தலைவராக ஜி.சி.ஸ்ரீதரன், செயலாளராக பி.சந்திரசேகரன், பொருளாளராக டி.ஆனந்தன் மற்றும் துணைத் தலைவா்கள், செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.