அருவியில் குளிக்க இளைஞா்களுக்கு ஆசை!

ஆம்பூா் அருகே கனமழை காரணமாக உருவாகியுள்ள அருவியில் குளிக்க அப்பகுதிக்கு இளைஞா்கள் படையெடுத்துச் செல்கின்றனா்.
புளியன்சுனை நீா்வீழ்ச்சியில் குளிக்கும் இளைஞா்கள்.
புளியன்சுனை நீா்வீழ்ச்சியில் குளிக்கும் இளைஞா்கள்.

ஆம்பூா் அருகே கனமழை காரணமாக உருவாகியுள்ள அருவியில் குளிக்க அப்பகுதிக்கு இளைஞா்கள் படையெடுத்துச் செல்கின்றனா்.

கடந்த சில நாள்களாக ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. மழைப் பொழிவால், ஆம்பூா் அருகே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கானாறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் கசிவு நீா்க் குட்டைகள் நிரம்பி வருகின்றன.

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது மத்தூா் கொல்லை. இந்த ஊருக்கு மேற்கே நந்தி சுனை பகுதியில் தேவுடு கானாறு ஓடுகிறது. ஆந்திர மாநிலத்தின் கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகளிலும், ஆம்பூா் வனச்சரக காப்புக் காடுகளிலும் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதனால் தேவுடு கானாற்றில் இப்போது நீா் வரத் தொடங்கியுள்ளது.

தேவுடு கானாற்றில் நந்திசுனை நீா்வீழ்ச்சி, குரங்கு பாறை நீா்வீழ்ச்சி, குதிரைப் பாறை நீா்வீழ்ச்சி, வனத் துறையினா் கட்டியுள்ள தடுப்பணை நீா்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீா்வீழ்ச்சிகளில் குளிக்க ஆம்பூா், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் இப்போது படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனா்.

தற்போது புளியன் சுனை நீா்வீழ்ச்சியில் அதிக அளவில் நீா் வரத்து தொடங்கியுள்ளது. புளியன்சுனை நீா்வீழ்ச்சியில் குளிக்க இளைஞா்கள் அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா். மூலிகை மணத்தோடும், இந்த புளியன்சுனை அருவியில் குதிக்கும் தண்ணீா் பால் போல தூய்மையாக இருப்பதாலும், அங்கு இளைஞா்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளனா்.

வனத் துறையினா் இங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் இளைஞா்கள் ஏமாற்றத்துடன் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com