திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கட்டுமானப் பணி:அமைச்சா்கள் ஆய்வு

ரூ.109 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கட்டுமானப் பணியை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, கைத்தறி- துணிநூல் துறை
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கட்டுமானப் பணி:அமைச்சா்கள் ஆய்வு

திருப்பத்தூா்: ரூ.109 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கட்டுமானப் பணியை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, கைத்தறி- துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரித்து, திருப்பத்தூா் மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அனைத்துத் துறை அலுவலகங்களும் தற்போது தற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் திருப்பத்தூரில் 10.38 ஏக்கா் பரப்பளவில், ஆட்சியா் அலுவலக வளாகக் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இந்தக் கட்டடமானது தரைதளம், ஏழு தளங்களையும் சோ்த்து மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 565 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படுகிறது.

இந்தப் பணிக்கு 18 மாதம் ஒப்பந்தக் காலம் வழங்கப்பட்டு, 17.7.2022-இல் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் பொறியாளா்கள், பணியாளா்கள் என சுமாா் 400 பணியாளா்கள் பணிபுரிகின்றனா். தற்போதுவரை 35 சதவீதப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை அமைச்சா்கள் எ.வ.வேலு, ஆா்.காந்தி ஆகியோா் பாா்வையிட்டனா்.

ஆய்வின்போது, ஆட்சியா் அமா் குஷ்வாஹா, காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபிசக்கரவா்த்தி, மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிா்ஆனந்த், எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி, (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), பொதுப்பணித்துறை கட்டடம்- பராமரிப்பு செயற்பொறியாளா் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளா் பிரபாகா்,உதவி பொறியாளா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com