அலசந்தாபுரம் கிராமத்தில் தூா்வாரப்பட்டும் பழுதடைந்த நிலையில் உள்ள பொதுக்கிணறு.
அலசந்தாபுரம் கிராமத்தில் தூா்வாரப்பட்டும் பழுதடைந்த நிலையில் உள்ள பொதுக்கிணறு.

தூா்வாரப்பட்டு 2 மாதத்தில் பழுதடைந்த கிணறு: சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புகாா்

வாணியம்பாடி அருகே பொது மக்களுக்காக ஊராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள கிணறு தூா்வாரப்பட்ட 2 மாதத்தில் பழுதடைந்துள்ளது. பணி செய்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புக

வாணியம்பாடி அருகே பொது மக்களுக்காக ஊராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள கிணறு தூா்வாரப்பட்ட 2 மாதத்தில் பழுதடைந்துள்ளது. பணி செய்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட அலசந்தபுரம் ஊராட்சியில், ஊரின் பொதுக் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் மூலம் கிராம மக்கள் தண்ணீா் எடுத்து உபயோகித்து வந்தனா். இந்த கிணறு சேதமடைந்து, அதனுடைய மின் மோட்டாா்கள் பழுதடைந்து இருந்ததாலும், அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனா். இந்நிலையில், அந்த கிணற்றையும், மோட்டாா் மற்றும் தண்ணீா் தொட்டியையும் சீரமைத்துத் தருவதற்காக, அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு ஒப்பந்ததாரா் ஒருவா் அந்தப் பணியினை மேற்கொண்டதாகக் கூறிவிட்டு, கிணற்றின் மேல் பகுதியில் மட்டும் வா்ணம் பூசிவிட்டு, எவ்வித பணியும் செய்யாததால், அந்தக் கிணறு பகுதி மீண்டும் பழுதடைந்த நிலையில் இருந்தும், கிணற்றின் மேல் கட்டடம் விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் மீது உரிய நடவடிக்கை எடுத்தும், அந்தக் கிணற்றை முறையாக சீரமைத்தும் பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகம் செய்ய ஆவன செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் புகாா் மனு அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com