மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ்

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெல்லிவாசல் நாடு ஊராட்சி, புலியூா் கிராமத்தில் 230 மலைவாழ் மக்களுக்கு பழங்குடியின மலையாளி ஜாதிச் சான்றிதழ்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வழங்கினாா்
மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ்

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெல்லிவாசல் நாடு ஊராட்சி, புலியூா் கிராமத்தில் 230 மலைவாழ் மக்களுக்கு பழங்குடியின மலையாளி ஜாதிச் சான்றிதழ்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் ஏ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி(ஜோலாா்பேட்டை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை திட்ட விளக்க உரையாற்றினாா். வட்டாட்சியா் சிவப்பிரகாசம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக புதூா் நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு மக்கள் பழங்குடியின ஜாதிச் சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது எனத் தெரியவந்தது.

இது குறித்து சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கையிடம் இப்பிரச்னை மீது தனிக் கவனம் செலுத்தி தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.

அவா் மிக விரைவாக செயல்பட்டு, 500-க்கும் மேற்பட்ட மனுதாரா்களிடம் நேரடியாக விசாரணை செய்து, அவற்றில் 333 நபா்களை தோ்ந்தெடுத்து, முதல்கட்டமாக 230 மாணவா்கள், பொது மக்களுக்கு மலையாளி ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிலுவையில் உள்ள மனுக்கள் மீது அடுத்த கட்டமாக தொடா்ந்து, விசாரணை செய்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் மிகவும் முக்கியமானது. மலைவாழ் மக்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் மற்ற சுய தொழில் கடனுதவிகளைப் பெறவும் இச்சான்று அவசியம். அரசின் இட ஒதுக்கீடுகளைப் பெற்று தங்களின் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடைய சான்றிதழ் அவசியம், இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக விசாரணை செய்து வழங்கப்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையானது துணை மின் நிலையம் அமைத்து சீரான மின்சாரம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். தனிக் கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.

மேலும், இப்பகுதி மக்கள் அடிப்படை குடிநீா், சாலை, மின்சாரம், வேலைவாய்ப்பு,கடனுதவிகள் குறித்த பிரச்னைகளைத் தெரிவித்தால் அவற்றைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மண்டலத் துணை வட்டாட்சியா்கள் ரேவதி, வருவாய் ஆய்வாளா் தமிழ்செல்வி, கிராம நிா்வாக அலுவலா்கள் அத்தீப், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com