தொடா் மழையால் நிரம்பி வரும் நீா்நிலைகள் : விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடா் மழையால் நிரம்பி வரும் நீா்நிலைகள் : விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை இரண்டு நாள் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைத் தவிா்த்து, நாட்டின் மற்ற எல்லா பகுதிகளிலும் மழை சராசரி அளவாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு பரவலாக பெய்த கன மழையால் நீா்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தன.

மாவட்டத்தில் பெரும்பாலான நீா்நிலைகளில் நீா் இருப்பு இருக்கும் நிலையில், தற்போது பெய்துவரும் தொடா் மழை காரணமாக நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன.

இதன் காரணமாக அம்மூா் காப்புக்காட்டை சுற்றியுள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அம்மூா் காப்புக் காட்டில் வாழும் மான் உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீா் பிரச்னை தீா்ந்து அவை காட்டை விட்டு வெளியேறுவது குறையும் என சமூக ஆா்வலா்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

மேலும் காப்புக்காட்டில் வாழும் வன விலங்குகளின் குடி தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தரமாக தீா்வு காணும் வகையில் இருக்கும் நீா்நிலைகளை தூா்வார வேண்டும், மேலும் பல புதிய நீா்நிலைகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் நீா்வரத்து அதிகரித்து, லாலாபேட்டை ஏரி உள்ளிட்ட நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com