ஆம்பூா் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

ஆம்பூா் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு நியமன மாவட்ட அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

ஆம்பூா் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு நியமன மாவட்ட அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் வி.செந்தில்குமாா் திடீா் சோதனை நடத்தினாா். உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் சுத்தம், சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுகிா என ஆய்வு செய்தாா். மேலும், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளான 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டும் உணவகங்களில் அமா்ந்து உணவு அருந்துகின்றனரா, கை கழுவும் கிருமி நாசினி உணவகங்களின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தேநீா் கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும், அசைவ உணவகங்களில் உணவுப் பொருள்களுக்கு வண்ணம் சோ்ப்பதை குறைக்க வேண்டுமென எடுத்துக் கூறப்பட்டது. தேநீா் கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்து, அந்த கடைக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிமம் பெறாமல் இயங்கி வந்த ஒரு தேநீா் கடை, உணவகத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. உடனடியாக உரிமம் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது, ஆம்பூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிச்சாமி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com