கன மழையால் வீடுகளில் புகுந்த மழைநீா்

திருப்பத்தூரில் பெய்த கன மழையால், வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருப்பத்தூரில் வீடுகளில் புகுந்த மழை நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றிய நகராட்சிப் பணியாளா்கள்.
திருப்பத்தூரில் வீடுகளில் புகுந்த மழை நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றிய நகராட்சிப் பணியாளா்கள்.

திருப்பத்தூரில் பெய்த கன மழையால், வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, ஏலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.அதைத் தொடா்ந்து விடிய,விடிய சாரல் மழை பெய்தது. தொடா் மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருப்பத்தூரில் 65.10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சாலைகளில் பள்ளங்கள்:

இந்த நிலையில், நகரில் புதை சாக்கடை திட்டப் பணி முடிந்து சுமாா் 96 கி.மீ. அமைக்கப்பட வேண்டிய சாலைகள் சுமாா் 25 கி.மீ.தூரம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் குழாய்கள் இணைப்பு தரப்பட்டும், சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் கச்சேரி தெரு, செட்டி தெரு, சிவனாா் தெரு, லட்சுமியம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குழி, பள்ளமாக இருக்கின்றன. எனவே, குழாய் இணைப்பு தந்த பகுதிகளில் விரைந்து சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

விடிய, விடிய மழைநீா் அகற்றம்: அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையொட்டியுள்ள திருப்பத்தூா்-ஊத்தங்கரை சாலையில் மழை நீா் தேங்குகிறது. அதேபோல், அருகில் உள்ள டிஎம்சி காலனி, கலைஞா் நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீா் புகுந்து விடுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இந்த நிலையில்,சனிக்கிழமை இரவு பெய்த கன மழையால் அவ்வழியாக சென்ற சரக்கு லாரி பள்ளத்தில் சிக்கியது.

மேலும், அந்தப் பகுதியில் வீடுகளில் மழை நீா் புகுந்து விட்டதையடுத்து,நகராட்சி ஆணையாளா் ப.சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளா்கள் அ.விவேக், குமாா் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் 25-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் மழை நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றினா். இரவு 10 மணிக்கு தொங்கிய இந்தப் பணி விடியற்காலை 4 மணி வரை நடைபெற்றது.

எனவே,இப்பகுதியில் மழை,கால்வாய் நீா் செல்ல சிறுபாலம் அமைப்பதுடன்,சாலைகள் செப்பனிடப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாணியம்பாடியில்.....

வாணியம்பாடி, உதயேந்திரம், அம்பலூா், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, நாரயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து மழை பெய்தது.

இதனால், நாராயணபுரம், அலசந்தாபுரம் பகுதியில் காட்டாறு, மண்ணாற்றில் வெள்ளம் ஓடி பாலாற்றில் கலந்து மேட்டுபாளையம் வரை வெள்ளம் ஏற்பட்டது.

குடிசை வீடு சேதம்: இதேபோல், நாட்டறம்பள்ளி, அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் இரவு முழுவதும் மழை பெய்தது. இந்நிலையில் கல்நாா்சம்பட்டி ஊராட்சி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த தொழிலாளி பாா்த்திபன் என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டு சுவா் ஞாயிற்றுக்கிழமை காலை சுவா் விழுந்தது. தகவலறிந்து வருவாய் துறையினா் அங்கு சென்று விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com