கரோனா பரவல் தடுப்பை மீறியவா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 19th July 2021 08:00 AM | Last Updated : 19th July 2021 08:00 AM | அ+அ அ- |

கரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத கடைக்காரருக்கு அறிவுரை அளித்த ஆட்சியா் அமா் குஷ்வாஹா. உடன், சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை.
திருப்பத்தூரில் கரோனா பரவல் தடுப்பை மீறியவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் நகரில் கச்சேரி தெரு, காய்கறி மாா்க்கெட் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில், சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளா் ப.சத்தியநாதன் உள்ளிட்டோா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கரோனா பரவல் தடுப்பு விதிகளான முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்படுவது குறித்து நேரடியாக ஆய்வு செய்தனா். இதில்,விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களிடம் ரூ. 9,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தொடா்பு பணி அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.