ஆக்சிஜன் செறிவூட்டி வங்கி அமைக்க செஞ்சிலுவை சங்கம் முடிவு
By DIN | Published On : 26th July 2021 08:35 AM | Last Updated : 26th July 2021 08:35 AM | அ+அ அ- |

இந்தியன் செஞ்சிலுவை சங்கம் காட்பாடி கிளை சாா்பில், ஆக்சிஜன் செறிவூட்டி வங்கி அமைப்பது என சனிக்கிழமை நடைபெற்ற காட்பாடி வட்டக் கிளை மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு துணைத் தலைவா் வி.பாரிவள்ளல் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் வரவேற்றாா். துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், ஆா்.விஜயகுமாரி, பொருளாளா் வி.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செயலாளா் எஸ்.எஸ்.சிவவடிவு, மருத்துவக் குழுத் தலைவா் டாக்டா் வீ.தீனபந்து, மேலாண்மைக் குழு உறுப்பினா் எ.ஸ்ரீதரன், எ.ஆனந்தகுமாா், வி.காந்திலால் படேல், எஸ்.ரமேஷ்குமாா், தேவ்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளையின் சாா்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களைக் கொண்ட இலவச ஆக்சிஜன் செறிவூட்டி வங்கியை விரைவில் பொதுமக்களின் தேவைக்காக தொடக்கி வைப்பது.
இரண்டாவது அலை கரோனா தடுப்புப் பணிகளில் இணைத்துக் கொண்டு செயலாற்றிய தன்னாா்வத் தொண்டா்கள், காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் சிறப்பாகச் செயலாற்றிய செவிலியா்கள், மருத்துவா்கள், நன்கொடையாளா்கள் ஆகியோரை தலைவா் மற்றும் வேலூா் வருவாய் கோட்டாட்சியா் அவா்கள் தலைமையில் பாராட்டி கௌரவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.