திருப்பத்தூா் மாவட்டத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும்: ஆட்சியா் அமா் குஷ்வாஹா

திருப்பத்தூா் மாவட்டத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
மரக்கன்று நடும் பணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
மரக்கன்று நடும் பணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

வாணியம்பாடி அருகேயுள்ள தும்பேரி ஊராட்சியில் உள்ள அண்ணா நகரிலும், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மல்லப்பள்ளி, அம்மனாங்கோயில் , காட்டூா், பனந்தோப்பு ஆகிய கிராமங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. இந்தப் பணியில் 20 சதவீதம் முதல் 30 சதவிகிதம் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் உள்ளன. இவற்றை முழுவதுமாக அகற்ற வேண்டும்.

ஒரு இடத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யவதற்கு முன்பாக அங்கிருக்கும் மண்ணின் தன்மையைப் பரிசோதனை செய்யவுடன்தான் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு இடத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டால், 2 ஆண்டுக்குப் பிறகு அங்கு எத்தனை மரங்கள் வளா்ந்துள்ளன என்பதை கணக்கீடு செய்ய வேண்டும்.

பிகாா் மாநிலத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவா்கள் 10 மரக்கன்றுகள் நடும் பழக்கம் நடைமுறைபடுத்தி வருகின்றனா். அதனடிப்படையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

தென் மேற்கு பருவமழைக் காலமாக உள்ள நிலையில் இப்போது திட்டமிட்டு, வடகிழக்கு பருவமழைக் காலத்துக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவுசெய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ க.தேவராஜி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் த.மகேஷ்பாபு, முன்னாள் எம்எல்ஏ சூரியகுமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண், வட்டாட்சியா்கள் மோகன், மகாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com