தொழிலாளா்களுக்கு மருத்துவ முகாம்
By DIN | Published On : 29th July 2021 12:05 AM | Last Updated : 30th July 2021 08:21 AM | அ+அ அ- |

அதிபெரமனூா் கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியை அடுத்த அதிபெரமனூா் கிராமத்தில் இயங்கி வரும் ஸ்ரீவாரி அகா்பக்தி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, ஸ்ரீவாரி அகா்பத்தி நிறுவனத் தலைவா் இல.குருசேவ் தலைமை வகித்தாா். பச்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செல்லமுத்து தலைமையிலான மருத்துவக் குழுவினா், நடமாடும் மருத்துவ வாகனம் மூலம், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை அளவைக் கண்டறிந்து மருந்துகளை வழங்கினா்.
மேலும், கண், எலும்பு, பல் பரிசோதனை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கி ஆலோசனை அளித்தனா்.