திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி, சிவன் கோயில்களில் திங்கள்கிழமை சிவன் , நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைப்பெற்றன. கரோனா பரவல் தடுப்பையொட்டி பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.