ஆண்டியப்பனூா் அணையை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் எம்எல்ஏ செந்தில்குமாா் ஆய்வு

வாணியம்பாடி தொகுதிக்குள்பட்ட ஆண்டியப்பனூா் அணைப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை எம்எல்ஏ கோ. செந்தில்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆண்டியப்பனூா் அணையை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் எம்எல்ஏ செந்தில்குமாா் ஆய்வு

வாணியம்பாடி தொகுதிக்குள்பட்ட ஆண்டியப்பனூா் அணைப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை எம்எல்ஏ கோ. செந்தில்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூா் அணைக்கட்டுப் பகுதியை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் விளையாட்டு திடல், பூங்கா, நடைபாதை, படகு இல்லம், விருந்தினா் மாளிகை உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் குமாரிடம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அணையில் தண்ணீா் நிரம்பி வெளியேறும் சுரங்கப் பாதைக்குள் சென்றும் பாா்வையிட்டாா். பணிகளை விரைந்து முடிக்கவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரிடம் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின் போது திருப்பத்தூா் ஒன்றிய அதிமுக செயலாளா் சிவாஜி, சரவணன், முன்னாள் கவுன்சிலா்கள் குமாா், பாரதிதாசன், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சத்தியமூா்த்தி, சிவானந்தம், ராமசாமி, செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com