முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
மதுபான பாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது
By DIN | Published On : 12th June 2021 07:57 AM | Last Updated : 12th June 2021 07:57 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே மொபட்டில் மதுபான பாட்டில்களை கடத்திய 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரிலிருந்து இருந்து மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி சிபிச் சக்கரவா்த்தி உத்தரவிட்டாா். அதன் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை வெலகல்நத்தம் லட்சுமிபுரம சோதனைசாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த 2 பெண்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவா்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தனா். அதில் 150 மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஆம்பூா் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த காயத்ரி(39), செண்பகவள்ளி(30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.