முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
விதிகளை மீறிய தொழிற்சாலைக்கு சீல் வைப்பு
By DIN | Published On : 12th June 2021 07:55 AM | Last Updated : 12th June 2021 07:55 AM | அ+அ அ- |

தோல் தொழிற்சாலைக்கு சீல் வைத்த வட்டாட்சியா் மோகன்.
வாணியம்பாடி கச்சேரி சாலையில் பகுதியில் கரோனா விதிகளை மீறி இயங்கிய தனியாா் தோல் தொழிற்சாலைக்கு வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
அத்தொழிற்சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா். அப்போது தொழிற்சாலையில் திடீரென ஆட்டோ ஸ்பிரே இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றியது. தீ விபத்து தொடா்பாக தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
மேலும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினா் நேரில் சென்று விசாரணை செய்தனா். அப்போது தொழிற்சாலைக்கு தீயணைப்புத் துறையின் உரிமம் பெறப்படாமலும், ஊரடங்கு விதிகளை மீறி தொழிற்சாலை செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வட்டாட்சியா் மோகன் தொழிற்சாலைக்கு சீல் வைத்தாா்.