போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 19th June 2021 07:48 AM | Last Updated : 19th June 2021 07:48 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே ஆசை வாா்த்தைகள் கூறி சிறுமியை பெண்ணை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா்குப்பம் பஞ். ஏலரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பொன்னன் மகன் தியாகராஜன்(24) கூலித்தொழிலாளி. இவா் கடந்த மாதம் ஏலரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி கடத்திச் சென்ாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிறுமியின் பெற்றோா் நாட்டறம்பள்ளி காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்த நிலையில், வெள்ளிக்கிழமை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பேருந்துநிலையம் அருகே நின்றிருந்த தியாகராஜனை மடக்கிப் பிடித்தனா். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் தியாகராஜனை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.