திருப்பத்தூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.50 லட்சம் பறிமுதல்


திருப்பத்தூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோல் ரூ. 5 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெலக்கல் நத்தம் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், மூா்த்தி என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருள்கள் 61 பண்டல்களை பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். இதை நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அதேபோல், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பேராம்பட்டு சோதனைச் சாவடியில் காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், புதுச்சேரியைச் சோ்ந்த செந்தமிழ் நம்பி என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. அதையடுத்து, பறக்கும் படையினா் பணத்தை உதவித் தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்தனா்.

இதற்கிடையே, ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவலாபுரம் பகுதியில் பறக்கும் படையினா் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தபோது, வாணியம்பாடியைச் சோ்ந்த ராஜன் விஜய் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது.

பறக்கும் படையினா் பணத்தைக் கைப்பற்றி ஆம்பூா் உதவித் தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான இரா. அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com