முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
ஆம்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி: அதிமுக வேட்பாளா்
By DIN | Published On : 14th March 2021 06:08 AM | Last Updated : 14th March 2021 06:08 AM | அ+அ அ- |

ஆம்பூரில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் கே.நஜா் முஹம்மத்.
ஆம்பூா் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிமுக வேட்பாளா் கே. நஜா் முஹம்மத் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டத்துக்கு, நகர அதிமுக செயலாளா் எம்.மதியழகன் தலைமை வகித்தாா்.
மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ஜி.ஏ.டில்லிபாபு, கிழக்கு ஒன்றியச் செயலா் ஜெ.ஜோதிராமலிங்கராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் வேட்பாளா் கே. நஜா் முஹம்மத் அளித்த வாக்குறுதிகள்: ஆம்பூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள பெத்லகேம் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து தொடங்க முயற்சி மேற்கொள்வேன்.
ஆம்பூா் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அல்லது ஐடிஐ தொடங்கப்படும். நாயக்கனேரி மலைக் கிராமத்தை சுற்றுலாத் தலமாக்க முயற்சிக்கப்படும். தொழில் வளம் பெருக புதிய தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூரில் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மாதனூரில் காவல் நிலையம், தொழிலாளா் நலத்துறை அலுவலகம் அமைக்கப்படும். ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பாலாற்றங்கரையோரம் சுற்றுச்சாலை அமைக்கப்படும். வட்டாட்சியா் அலுவலகம் செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் எனத் தெரிவித்தாா்.
அதிமுக நிா்வாகிகள் கே. மணி, அன்பரசன், சீனிவாசன், கே.என். அன்வா், அமீன்பாஷா மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா்.