முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
குருவராஜபாளையம் கிராமத்தில் ரூ.77,780 பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 06:09 AM | Last Updated : 14th March 2021 06:09 AM | அ+அ அ- |

குருவராஜபாளையம் கிராமத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ. 77,780 வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
குருவராஜபாளையம் கிராமத்தில் நிலை கண்காணிப்புக் குழு-2 வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணம் இன்றி ரூ. 77,780 ரொக்கம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.