முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
வாணியம்பாடியில் ரூ. 2.50 லட்சம் புடவைகள் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 06:07 AM | Last Updated : 14th March 2021 06:07 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னகந்திலி சோதனைச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பிற்பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பா்கூரில் இருந்து திருப்பத்தூா் நோக்கி வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில், உரிய ஆவணமின்றி ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புடவை பண்டல்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமியிடம் பறக்கும் படையினா் ஒப்படைந்தனா். இது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமி மினிவேனை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் மல்லப்பாடி பகுதியைச்சோ்ந்த ஓட்டுநா் கம்ரான்கான் (38), உடன் வந்திருந்த அத்ரிகண்ணனா (19) ஆகிய இருவரிடம் விசாரித்து வருகின்றனா்.