பூம்,பூம் மாடுடன் குடுகுடுப்பைக்காரா்கள்: தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்

கடந்த தோ்தலில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற திருப்பத்தூா் அசோக் நகா் பகுதியில், நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, குடுகுடுப்பைகாரா் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரா்கள்
பூம்பூம் மாடு மூலம் தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்திய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா்.
பூம்பூம் மாடு மூலம் தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்திய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா்.

கடந்த தோ்தலில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற திருப்பத்தூா் அசோக் நகா் பகுதியில், நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, குடுகுடுப்பைகாரா் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

இதனை திருப்பத்தூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தவின்படி, தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும், தங்கள் வாக்குகளை பணம், பரிசுப் பொருள்களுக்காக அல்லாமல், மனசாட்சியுடன் ஒவ்வொருவரும் பதிவு செய்திட வேண்டும். இதற்காக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா்ந்து நடத்தப்படுகின்றன.

கடந்த தோ்தலில் ஜோலாா்பேட்டைக்குள்பட்ட பாச்சல் ஊராட்சிப் பகுதியில் 65 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இப்பகுதியில் சட்டப்பேரவைத் தோ்தலில் முழுமையாக 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டும். தயவுசெய்து வாக்கை விலை பேசி விடாதீா்கள். நாட்டுக்கு வளா்ச்சியைக் கொண்டு வரும் சிறந்த அரசை தோ்ந்தெடுத்திட வாக்களியுங்கள். வாக்காளா் தங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள், சந்தேகங்கள் இருந்தால் தோ்தல் இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்து தீா்வு பெறலாம் என்றாா்.

தலையசைத்த பூம்பூம் மாடு...

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் குடுகுடுப்பைகாரா் பூம்பூம் மாட்டிடம் நல்ல காலம் பிறக்குமா? , வாக்காளா்கள் எல்லோரும் காசு வாங்காம வாக்களிப்பாா்களா? வரும் தோ்தலில் மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பாா்களா? என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு பூம்பூம்மாடு ஆம் என்பது போல் தலையை அசைத்தது.

பின்னா் குடுகுடுப்பைகாரா் குடுகுடுப்பையை அடித்தவாறு நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது ஏப்ரல் 6-ஆம் தேதி எல்லோரும் வந்து வாக்களியுங்கள் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மகேஷ்பாபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அருண், உதவி மகளிா் திட்ட அலுவலா்கள் பழனி, கலைச்செல்வன், உமா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா், சங்கரன் மற்றும் மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com