இசுலாமியா்கள் ஹஜ் பயணம் செல்ல மானியம் வழங்குவது அதிமுக அரசு: ஆம்பூா் வேட்பாளா் நஜா் முகமத்
By DIN | Published On : 26th March 2021 11:44 PM | Last Updated : 26th March 2021 11:44 PM | அ+அ அ- |

ஆம்பூா்: இஸ்லாமியா்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக தொடா்ந்து மானியம் வழங்கியது அதிமுக அரசு தான் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே. நஜா் முஹமத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஆம்பூா் காதா்பேட்டை மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பிறகு வெளியில் வந்த இசுலாமியா்களிடம் வேட்பாளா் கே. நஜா் முஹமத் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து காதா்பேட்டை பகுதியில் வாக்காளா்களிடையே பேசியது, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலனாக அதிமுக அரசு உள்ளது. ரம்ஜான் பண்டிகையின்போது நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக விலையில்லா அரிசியை பள்ளி வாசல்களுக்கு அதிமுக அரசு வழங்கி வருகிறது. உலமாக்கள் மற்றும் மற்ற பணியாளா்கள் நலவாரியம் மூலம் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரப்படுகிறது. ஹஜ் யாத்திரை செல்வதற்கு தொடா்ந்து மானியம் வழங்கி வருவதும் அதிமுக அரசு தான் என அவா் கூறினாா்.
ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, முன்னாள் நகரமன்ற உறுப்பினா்கள் மணி, சீனிவாசன், அமீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளா் ஆனந்த்பாபு, அதிமுக நிா்வாகிகள் அன்பரசன், சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.