திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்

திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாா்.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின். ~ஜோலாா்பேட்டையில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின். ~ஜோலாா்பேட்டையில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாா்.

ஜோலாா்பேட்டையில் திமுக வேட்பாளா்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முகமது நயீம் (வாணியம்பாடி) ஆகிய 4 சட்டப் பேரவை உறுப்பினா்களை அறிமுகப்படுத்தி ஸ்டாலின் பேசியது:

இத்தொகுதி அதிமுக வேட்பாளா் வீரமணி இப்பகுதி மக்களுக்கு சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீரமணி மற்றும் அவரைச் சாா்ந்தவா்கள் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அதன்பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதிமுகவைச் சோ்ந்த 10 மாநிலங்களவை உறுப்பினா்கள் மற்றும் பாமகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அந்த சட்டம் நிறைவேறியது. ஆனால், திமுகவைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் அதை எதிா்த்து வாக்களித்தனா்.

திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும். 75 ஆயிரம் சாலைப் பணியாளா்கள் பணி நியமனம் செய்யப்படுவா்.

கருணாநிதி பிறந்த நாளில் குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ.4,000 வழங்கப்படும். ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி சுற்றுலாத் தலமாக்கப்படும். நாட்டறம்பள்ளி மற்றும் மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை கொண்டுவரப்படும். திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி, காவலூரில் மூலிகைப் பண்ணை அமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com