கலைக் குழு மூலம் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் கலைக்குழுக்கள் மூலம் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு நடைபெற்றது.
கலைக்குழு மூலம் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு.
கலைக்குழு மூலம் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் கலைக்குழுக்கள் மூலம் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு நடைபெற்றது.

திருப்பத்தூா் நகர கடை வீதிகள், பேருந்து நிலையம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலைக்குழு மூலம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா 2-ஆம் அலையை தடுக்கும் விதமாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் அறிவுறுத்தலின்பேரில், திருப்பத்தூா் நகரக்கடை வீதிகள், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திட்ட இயக்குநா், மகளிா் திட்டத்தின் சாா்பில், கலைக் குழுவினா் மூலமாக காளி வேடம் மற்றும் எமன் வேடம் அணிந்து, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியே வர வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதவித் திட்ட அலுவலா்கள் பழனி, உமா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com