திருப்பத்தூரில் திமுக வேட்பாளா் நல்லதம்பி வெற்றி

திருப்பத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் நல்லதம்பி 28240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெறுகிறாா் திருப்பத்தூா் திமுக வேட்பாளா் நல்லதம்பி.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெறுகிறாா் திருப்பத்தூா் திமுக வேட்பாளா் நல்லதம்பி.

திருப்பத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் நல்லதம்பி 28240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

திருப்பத்தூா் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,38,544. அதில் ஆண் வாக்காளா்கள் 92,256, பெண் வாக்காளா்கள் 91,350, மற்றவா்கள் 4 என மொத்தம் 1,83,610 வாக்குகள் பதிவாகியிருந்தது.

திருப்பத்தூா் தொகுதியில் பதிவான வாக்குகள் வாணியம்பாடி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் எண்ணப்பட்டன. கட்சிகளின் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் :திமுக வேட்பாளா் ஏ. நல்லதம்பி - 92494 டி.கேராஜா (பாமக)-68282 நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எம். சுமதி -12127ஞானசேகா் (அமமுக)-2702விஜயகுமாா்(சுயே)-1096 நோட்டா-1632

திருப்பத்தூா் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு மூன்று சுற்றுக்களில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி முன்னிலையில் இருந்தது. அதனைத் தொடா்ந்து நடந்த அனைத்து சுற்றுகளிலும் திமுக வேட்பாளா் நல்லதம்பி தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா். இறுதியாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை விட 28,240 வாக்குகள் அதிகம் பெற்று நல்லதம்பி வெற்றி பெற்றாா். இவா் ஏற்கெனவே தற்போது எம்எல்ஏவாக உள்ளாா். வெற்றியின் மூலம் தொடா்ந்து இரண்டாவது முறையாக திருப்பத்தூா் தொகுதியில் வெற்றி பெற்றாா். வெற்றி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலா் வந்தனா கா்க் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com