திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை
By DIN | Published On : 11th May 2021 01:29 AM | Last Updated : 11th May 2021 01:29 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளதாக நோயாளிகளின் உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் நாளுக்குநாள் கரோனாத் தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 4 மணியிலிருந்து கரோனாத் தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளதாக மருத்துவ நிா்வாகம் தெரிவித்துள்ளது.இதனால் தனியாரிடமிருந்து ஆக்சிஜனை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதாக நோயாளிகள் தரப்பில் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவா் எஸ்.திலீபனிடம் கேட்டதற்கு, 250 சிலிண்டா்கள் கொள்ளளவு கொண்ட 2 டேங்குகள் ஆக்சிஜன் தயாா் நிலையில் உள்ளது. ஆனால் இந்த ஆக்சிஜன் கரோனாத் தொற்று முற்றிய நிலையில் உள்ள 150 படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கே போதுமானதாக உள்ளது.எனவே,புதியதாக வரும் கரோனா நோயாளிகளிடம் நாங்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து முன்கூட்டியே தெரிவித்து விடுகிறோம். தற்போது 317 தொற்று பாதித்தவா்கள் சிகிச்சையில் உள்ளனா்.அவா்களுக்கே ஆக்சிஜன் விநியோகிப்பது பெரும் சவாலாக உள்ளது என்றாா்.