திருப்பத்தூரில் இயங்கி வந்த நகராட்சி காய்கறி மாா்க்கெட் பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலை,தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் இயங்கி வந்த நகராட்சி காய்கறி மாா்க்கெட் திங்கள்கிழமை முதல் பேருந்து நிலையத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.