ஆம்பூா் நகராட்சி சாா்பில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 17th May 2021 07:30 AM | Last Updated : 17th May 2021 07:30 AM | அ+அ அ- |

ஆம்பூரில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
ஆம்பூா் ஓ.வி. ரோடு அருகே சுண்ணாம்பு காளவாய் பகுதியில் அமைந்துள்ள புவா ஷாதி மஹாலில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் உடல் பரிசோதனை முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் முகாமை தொடக்கி வைக்கின்றனா். ஆம்பூா் நகரம் மற்றும் பிற பகுதியைச் சோ்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இதனைப் பயன்படுத்தி, கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
முகாமுக்கான ஏற்பாடுகளை ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.சௌந்தரராஜன், வட்டார மருத்துவ அலுவலா் ராமு, ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் ஆகியோா் செய்து வருகின்றனா்.