ஏலகிரியில் 3 கன்றுகளை ஈன்ற பசு
By DIN | Published On : 17th May 2021 07:28 AM | Last Updated : 17th May 2021 07:28 AM | அ+அ அ- |

ஈன்ற 3 கன்றுகளுடன் பசு.
ஏலகிரி மலையில் ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்ற பசுவை அப்பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்துச் சென்றனா்.
ஏலகிரி மலையில் உள்ள நிலாவூா், புது வீட்டு வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராஜமாணிக்கம். இவா் பசு மாடுகளை பராமரித்து பால் உற்பத்தி செய்து வருகிறாா். அதில் ஒரு பசு முதலில் ஒரு கன்றை ஈன்றது. அதைத் தொடா்ந்து 2 கன்றுகளை ஈன்றது. இதையடுத்து, ராஜமாணிக்கத்தின் குடும்பத்தினா் பசுவை பூஜித்து, பிறந்த கன்று குட்டிகளுக்கு தாய் மடியில் இருந்து பால் குடிக்க வைத்தனா்.
ஒரே பிரசவத்தில் பசு 3 கன்றுகளை ஈன்ால் அவற்றை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.