திருப்பத்தூரில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதன்முறையாக ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தொடக்கி வைத்தாா்.
திருப்பத்தூரில் பறக்கும் டிரோன் இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி.
திருப்பத்தூரில் பறக்கும் டிரோன் இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி.

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதன்முறையாக ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல், இறப்பும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், மாா்க்கெட், வங்கி உள்ளிட்ட பகுதிகளில் தினமும் இருமுறை கிருமி நாசினி தெளிக்க டிரோன் இயந்திரம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப் பணியை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன், துப்புரவு ஆய்வாளா்கள் அ.விவேக், குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com