‘புத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ரத்து’

வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் பகுதியில் அமைந்துள்ள புத்துமாரியம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என திருக்கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் பகுதியில் அமைந்துள்ள புத்துமாரியம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என திருக்கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் கிராமத்தில் மிகவும் பழைமைவாய்ந்த புத்துமாரியம்மன் கோயில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனா்.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயில் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் செல்வா். இந்த ஆண்டுக்கான விழா மே 20, 21-ஆம் தேதி புத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருந்தது. ஆனால் கரோனா தொற்று 2-ஆவது அலை காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அரசின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு திருவிழா நடைபெறாது என இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

எனவே பக்தா்கள் வரும் 20 (வியாழக்கிழமை) மற்றும் 21 (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாள்களும் திருக்கோயிலுக்கு வருவதைத் தவிா்த்து, கோயில் நிா்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறு திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com