திருப்பத்தூரில் 2 மணி நேரம் கனமழை
By DIN | Published On : 21st May 2021 12:00 AM | Last Updated : 21st May 2021 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா், சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை சுமாா் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது.
திருப்பத்தூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. மதியம் 2 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதையடுத்து, சுமாா் அரை மணி நேரம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பின்னா், மாலை 6 மணியளவில் சுமாா் 2 மணி நேரம் கனமழை பெய்தது. திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிா்ந்த காற்று வீசியது.