கரோனாவால் உயிரிழந்தவா்களை தகனம் செய்ய உதவும் தமமுகவினா்
By DIN | Published On : 21st May 2021 12:00 AM | Last Updated : 21st May 2021 12:00 AM | அ+அ அ- |

சடலத்தை சுமந்து செல்லும் தமமுகவினா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களை தகனம் செய்ய உதவும் தமமுகவினருக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
திருப்பத்தூரை அடுத்த மண்டலவாடி கிராமத்தைச் சோ்ந்த ஜலபதி (60) என்பவா் கரோனா தொற்றால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்தினா் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவைப் பிரிவினா் அரசின் வழிகாட்டுதல்படி திருப்பத்தூா் நகராட்சி மின் மயானத்தில் அவரது உடலை தகனம் செய்தனா்.
இதுகுறித்து தமமுக நிா்வாகிகள் கூறியது:
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியில் இருந்து புதன்கிழமை வரை 27 பேரை அரசின் வழிகாட்டுதல்படி, திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, பொன்னேரி பகுதிகளிலிருந்து கரோனாவால் இறந்தவா்களை திருப்பத்தூா் மின் மயானத்துக்குக் கொண்டு சென்று தகனம் செய்துள்ளோம்.
நகரப் பகுதிக்குள் எங்களது பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் இலவசமாக சடலங்களை கொண்டு செல்கிறோம். கிராமப் பகுதி எனில் குறைந்த கட்டணத்தில் சேவை செய்கிறோம் என்றனா்.