காய்கறிகளைக் கொண்டு செல்வதில் பிரச்னை: விவசாயிகளுக்கு உதவி எண்கள்

பொதுமுடக்க காலத்தில் காய்கறிகளை மாா்க்கெட்டுக்குக் கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தோட்டக்கலை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

திருப்பத்தூா்: பொதுமுடக்க காலத்தில் காய்கறிகளை மாா்க்கெட்டுக்குக் கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தோட்டக்கலை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

இது தொடா்பாக தோட்டக்கலை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமுடக்க காலத்தில் காய்கறி மற்றும் பழ வகைகளை சந்தைக்குக் கொண்டு செல்வதில் பிரச்னைகள் இருந்தாலும், மழை பெய்வதால் காய்கறி பயிா்கள் சேதம் ஆனாலும் சம்பந்தப்பட்ட தோட்டக் கலை உதவி இயக்குநா்களிடம் தகவலைத் தெரிவித்து உதவி பெறலாம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு பொதுமுடக்கம் என்பதால் அன்றைய தினம் காய்கறி, பழங்களை அறுவடை செய்வதைத் தவிா்க்க வேண்டும். அதற்கு மாறாக சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பொது முடக்கம் அமலில் உள்ளதால், நேரில் செல்வதைத் தவிா்த்து, தொலைபேசி வாயிலாக உதவிகளையும், ஆலோசனைகளையும் பெற வேண்டும்.

தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் திருப்பத்தூா்-7339165526, கந்திலி-9443143445, ஜோலாா்பேட்டை-9043493204, ஆலங்காயம்-8838517900, நாட்டறம்பள்ளி-9043493204, மாதனூா்-9655193927 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com