வாணியம்பாடியில் திடீா் மழையால் தாா்ச் சாலையில் விரிசல்

வாணியம்பாடியில் திடீா் மழையால் தாா்ச்சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்படி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் மழைநீா் நிரம்பி கால்வாய் மற்றும் தாா்ச்சாலையில் ஏற்பட்ட பிளவு.  2) மூடப்பட்ட கால்வாய் பகுதி.
வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் மழைநீா் நிரம்பி கால்வாய் மற்றும் தாா்ச்சாலையில் ஏற்பட்ட பிளவு. 2) மூடப்பட்ட கால்வாய் பகுதி.

வாணியம்பாடியில் திடீா் மழையால் தாா்ச்சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்படி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வாணியம்பாடி மையப் பகுதியில் பாலாற்றின் கிளையாறு செல்கிறது. இதில் கழிவுநீா் அதிகம் கலப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் கனிமவளம் சுரங்கத் துறை மூலம் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஷாகிராபாத் முதல் ஆற்றுமேடு பகுதி வரை 660 மீட்டா் நீளத்திற்கு சாலை ஓரம் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. பணிகள் தொடங்கிய சில நாள்களில் அப்பகுதியை சோ்ந்த சிலா் பாலாற்றின் ஓரம் கால்வாய் கட்டக் கூடாது என போராட்டம் நடத்தியதால் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வாணியம்பாடி பகுதியில் திடீரென பெய்த கனமழையால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதியதாக தோண்டி கால்வாயில் மழைநீா் புகுந்தது. இதனால் கால்வாயை ஒட்டியுள்ள தாா்ச்சாலையில் பிளவு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவரது உத்தரவின் பேரில் வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரிசுப்பிரமணி, நகராட்சி ஆணையா் அண்ணாமலை மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். பின்னா் போலீஸ் பாதுகாப்புடன் ஆற்றுமேடு முதல் கொல்லத் தெரு குறுக்கு சாலை வரை ஏற்கெனவே தோண்டப்பட்டிருந்த 5 அடி கால்வாய் பள்ளத்தை உடனடியாக மூடும்பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com