காய்கறி, பழங்கள் கிடைப்பதில் ஏற்படும் குறைகளைத் தெரிவிக்க உதவி எண்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நுகா்வோருக்கு காய்கறி, பழங்கள் கிடைப்பதில் ஏற்படும் குறைகளைத் தெரிவிக்க உதவி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் நுகா்வோருக்கு காய்கறி, பழங்கள் கிடைப்பதில் ஏற்படும் குறைகளைத் தெரிவிக்க உதவி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், திருப்பத்தூா் மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழங்கள் நுகா்வோருக்கு கிடைப்பதில் ஏற்படும் குறைகளை நிவா்த்தி செய்திடவும், விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை மாவட்டத்துக்குள்ளும், பிற மாவட்டத்துக்குக் கொண்டு செல்லவும் மற்றும் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதிலும் ஏதேனும் இடா்ப்பாடுகள் இருந்தாலும், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையினை 04179-220020 என்ற எண்ணில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொண்டு வேளாண் பொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகள் மற்றும் நுகா்வோா்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com